வைஷ்ணவி தேவி கோயில் நகரில் புகையிலைக்கு தடை: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ள கத்ரா நகரில் புகையிலை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மிகவும் புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் 30,000 முதல் 40,000 யாத்ரீகர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயில் அமைந்துள்ள நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு கத்ரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி, மதுபானம் விற்பனை, வைத்திருப்பது மற்றும் அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கத்ரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிகரெட், குட்கா உள்ளிட்ட அனைத்து வகையாக புகையிலை பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்ரா மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது, “ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்லும் புனித சுற்றுலா நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு உலக புகையிலை எதிர்ப்பு தினமான சனிக்கிழமை(ஜூன் 1) முதல் புகையிலை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கத்ரா மாவட்டம் நுமே மற்றும் பந்தல் சோதனை சாவடிகளில் தொடங்கி தாரா கோர்ட் சாலை வழியாக பவன் வரையுள்ள பகுதிகளில் சிகரெட், குட்கா மற்றும் பிற புகையிலை பொருள்கள் வைத்திருப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. கத்ரா அடிப்படை முகாம், பாதை மற்றும் அனைத்து பகுதிகளையும் புகையில்லாத பகுதியாக மாற்றும் நோக்கத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post வைஷ்ணவி தேவி கோயில் நகரில் புகையிலைக்கு தடை: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: