வட மாநிலங்களில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை..ஒடிசாவில் வெப்ப வாதத்தால் 72 மணி நேரத்தில் 99 பேர் பலி!!

புதுடெல்லி: நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். ராஜஸ்தான், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, ஜார்க்கண்டின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. அதாவது வெப்ப அலை காரணமாக கடந்த 72 மணி நேரத்தில் ஒடிசாவில் மட்டும் 99 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45 பேர் அதீத வெப்பத்தால் பலியாகி உள்ளனர். இந்த வருடம் இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வட மாநிலங்களில் வாட்டி எடுக்கும் வெப்ப அலை..ஒடிசாவில் வெப்ப வாதத்தால் 72 மணி நேரத்தில் 99 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: