இதெல்லாம் தெரியுமா?

*மின்சாரத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்ளின், பள்ளி மாணவராக இருந்தபோது எப்போதும் கணக்கில் பூச்சியம்தான் வாங்கியிருக்கிறார்.

*தன் கொடூர ஆட்சியால் உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி உகாண்டாவின் இடிஅமீன். இவர் இருபது வயது ராணுவ வீரனுக்கும், நாற்பது வயது சமையல்காரம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர்.

*அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் எதுவரை படித்திருக்கிறார் தெரியுமா? ஐந்தாவது வகுப்புதான்.

*இரண்டாம் உலகப்போரின் வில்லனான ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர், தன் தாயாருக்கு நான்காவது மகன். அவருடைய தாயார் கிளாராவின் இரண்டாவது கணவருக்குப் பிறந்தவர்.

*ஈராக்கின் சர்வாதிகாரியாக அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய சதாம் உசேன், தன்னுடைய வளர்ப்புத் தந்தையின் கொடுமை தாங்காமல் பத்து வயதிலேயே வீட்டை விட்டு ஓடியவர்.

*இத்தாலியின் சர்வாதிகாரியாக உயர்ந்த முசோலினி, இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரோடு கூட்டணி அமைத்து உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினார். அவருடைய தாயார் மென்மையான குணம் கொண்ட பள்ளி ஆசிரியை. அவருடைய அப்பா இரும்புப் பட்டறையில் பணியாற்றிய தினக்கூலி தொழிலாளி.

Related Stories:

>