வளர்ச்சி திட்ட பணிகளை செய்வேன்: டி.கே.எம்.சின்னையா பிரசாரம்

சென்னை: தாம்பரம் சட்மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா தொகுதி முழுவதும் உள்ள  மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்று, கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மற்றும் கேம்ப் ரோடு பகுதியில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.அப்போது அங்கு மைதானத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி அவர்களிடம், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அதேபோல், அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர் அங்கு உடற்பயிற்சி செய்தார். தொடர்ந்து அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார். மீண்டும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அதிமுக அரசு செய்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று ேகட்டு கொண்டார். பிரசாரத்தின் போது தாம்பரம் நகர அதிமுக செயலாளர் கூத்தன், தாம்பரம் நகர மன்ற முன்னாள் தலைவர் கோபி, முன்னாள் கவுன்சிலர் எட்வர்ட், கிழக்கு தாம்பரம் பகுதி பாஜக தலைவர் வெங்கடசுப்ரமணியம், திவாகர், நடராஜன், பாமக மாவட்ட தலைவர் வினாயகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: