10.5 சதவீத இட ஒதுக்கீடு வந்தால் வன்னியர்களுக்கு பாதிப்பு அதிகம்: ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

சென்னை: தேர்தல் நேரத்தில் மட்டுமே 10.5 சதவீத இடஒதுக்கீடு பற்றி ராமதாஸ் பேசுவார். ஆனால் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வந்தால் வன்னியர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் எனவும், சமூகநீதியை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார். பேரவையில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை ஆற்றிய பின் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்திற்கு வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பதிலளித்தார். அதில், திமுக தொண்டன் என்ற முறையில் சொல்கிறேன், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து வாருங்கள், ஒரே இடத்தில் அமர்ந்து பேசலாம் என அழைப்பு விடுத்தார்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த 20% பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டினால் மாணவர்கள் வட மாநிலங்களில் சேருவார்கள் என ராமதாஸ் கூறினார். ஆனால் 10.5% இருந்தால் 10 மாணவர்கள் மட்டுமே சேர முடியும். பாமக தலைவர் ராமதாஸ் பேசுவது தேர்தல் நேரத்தில் மட்டுமே, தேர்தல் முடிந்தால் அதை மறந்துவிடுவார். ஆனால் சமூகநீதிக்கு தலைவர் கலைஞர்தான் அதிகம் செய்தவர். 10.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தினால் வன்னியர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம் ஏற்படும். சமூகநீதியை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமானது. 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்யாமல் உண்மைத்தன்மையை உணராமல், தேர்தல் நேரத்தில் ராமதாஸ் பேசுவது சரியானது அல்ல. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

The post 10.5 சதவீத இட ஒதுக்கீடு வந்தால் வன்னியர்களுக்கு பாதிப்பு அதிகம்: ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: