கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். அதிமுக சார்பில் 63 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சுமார் 24 வாகனங்களில் வருகை தந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. அந்த மனுவில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுகவை பொறுத்தவரையில் தமிழக சட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து கருப்புசட்டை அணிந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை மையப்படுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நேற்று அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து அடுத்தகட்டமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இருமாநில தொடர்புள்ளதால் ஒன்றிய அரசு கைவசம் உள்ள சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: