அனுமதிக்கப்பட்ட அளவில் தான் இருக்கிறதா? ரயில்கள் இயக்கத்தின்போது ஏற்படும் அதிர்வுகளை ஆய்வு செய்ய டெண்டர்: டிஎம்ஆர்சி அதிகாரி தகவல்

புதுடெல்லி: டெல்லி  மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் போது எழும் அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யும் பணி கடந்த 2011ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான பணியாகும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் இந்த பணியின் ஒருபகுதியாக, மஞ்சள் வழித்தடம்(சமாய்பூர் பத்லி-ஹூடா சிட்டி சென்டர்) மற்றும் ஊதா வழித்தடம்(காஷ்மீரி கேட்-பல்லாப்கர்க்) இடையே 80 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது.

இதுபற்றி மெட்ரோ நிறுகூன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ”இந்த ஆய்வு, கண்காணிப்பு ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பின்  (ஆர்.டி.எஸ்.ஓ) சத்தம் மற்றும் அதிர்வு வழிகாட்டுதல்கள், பெடரல் டிரான்ஸிட்  நிர்வாகத்தின் சத்தம் மற்றும் அதிர்வு வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் இதுபோன்ற ஆய்வுகள்  சாகேத், மாலவியா நகர், பேகம்பூர், ஹவுஸ் காஸ், கான் மார்க்கெட், கோல்ப்  லிங்க்ஸ், ஆசாத்பூர், பாலம், தஷ்ரத்புரி போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டுள் ளது”, என்றார்.

Related Stories: