டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான கூட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் முறைப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உறுப்பினர்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் டெல்லி சென்று கூட்டத்தில் பங்கேற்று தங்களது மாநிலங்களின் கருத்துகளை வலியுறுத்துவார்கள். தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி செல்லாமல், ஆன்லைன் வாயிலாக காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நீர்வளத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையத்தைவிட, காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் திடமான விவாதங்கள் நடத்தினால்தான் தமிழகத்தின் உரிமையை காக்க முடியும். எனவே, டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்.

The post டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான கூட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: