75வது சுதந்திர தினம் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: ‘நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம், மக்கள் பங்களிப்பின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்கான உயர் மட்ட அளவிலான கமிட்டி கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலம் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் 259 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``நாட்டின் 75வது சுதந்திர தினவிழா, மக்கள் பங்களிப்பின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டில் இருந்து, தற்போது வரை இந்தியா நிகழ்த்திய சாதனைகளை உலகிற்கு எடுத்து காட்ட சரியானதொரு சந்தர்ப்பமாகும். சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்,’’ என்றார். இந்த கமிட்டியில், முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், தலைமை நீதிபதி பாப்டே, அஜித் தோவல், 28 மாநில முதல்வர்கள், லதா மங்கேஷ்கர், ஏஆர். ரகுமான், அமர்த்தியா சென், எல்கே. அத்வானி, எதிர்க்கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத்பவார், மம்தா, முலயாம் சிங், மாயாவதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: