சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: வெளிநாட்டுக்கு  டாலர் கடத்தியதில் கேரள முதல்வர் பினராய் விஜயன், 3 அமைச்சர்கள், சபாநாயகருக்கு  தொடர்பு இருப்பதாக சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக  பார்சல் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கில், சொப்னா,  சரித்குமார், சந்தீப் நாயர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது  செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் இந்தியாவில்  முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கும்  கடத்தி உள்ளது. இது தொடர்பாக என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

வெளிநாட்டுக்கு  டாலர் கடத்திய வழக்கில் சுங்க இலாகா  நடத்திய விசாரணையில் சபாநாயகர்  ஸ்ரீராமகிருஷ்ணனுக்காகவும், சொப்னா கும்பல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது  ெதரிய வந்தது. டாலர் கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள பொருளாதார நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நடந்தபோது சிறையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், டாலர் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்த முக்கிய தகவல்களை ரகசிய வாக்குமூலமாக ெதரிவிக்க வேண்டும் என்றும் ெசாப்னா நீதிமன்றத்தில் கூறினார். இதையடுத்து, 164 சட்ட பிரிவின் கிழ் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

அந்த வாக்குமூலத்தை தற்ேபாது சுங்க இலாகா, பிரமாண வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் அமீரக துணை தூதருக்கும் ெதாடர்பு உண்டு. எனக்கு ஆங்கிலம், இந்தி, மலையாளம், அரபி மொழிகள் சரளமாக தெரியும். எனவே, தகவல்களை பரிமாற நான்தான் இருவருக்கும் உதவினேன். இதன் மூலம் பினராய் விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் 3 அமைச்சர்கள் நடத்தி வந்த முறைகேடுகள் அனைத்தும் எனக்கு தெரியும். பினராய் விஜயன் அறிவுறுத்தல்படிதான் ெபருமளவு டாலர் கடத்தல் நடந்துள்ளது.

இது குறித்த எல்லா விவரங்களும் எனக்கு ெதரியும். பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கேரள அரசுக்கும் அமீரக துணை தூதருக்கும் இடையே முக்கிய  இணைப்பாளராக செயல்பட்டார். முக்கிய பிரமுகர்கள் பெயரை கூறக்கூடாது என்று சிறையில் என்னை மிரட்டினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது இடதுசாரி கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>