கூட்டுறவு துறையில் 5000 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் எஸ்டி சோமசேகர் உறுதி

பெங்களூரு: கூட்டுறவு துறைகளில் காலியாக இருக்கிற 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்டி சோமசேகர் கூறினார். கர்நாடக மாநில கூட்டுறவு மகா சங்கம், மாநில பத்திரிகையாளர் கூட்டுறவு சங்கம், பெங்களூரு நகர மாவட்ட கூட்டுறவு சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கை அமைச்சர் எஸ்டி சோமசேகர் தொடங்கி வைத்து பேசியதாவது:``மாநில அரசின் சார்பில் கூட்டுறவு வளர்ச்சிக்காக ரூ.39 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது கூட்டுறவு துறை வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் வளர்ந்துள்ளது. கூட்டுறவு துறையின் சார்பில் பயிற்சி பெற்ற நிலையில் கூட்டுறவு வங்கிகள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளன.  

மைசூரு வளர்ச்சி கழகம் (மூடாவின்) சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பின் போது தகவல்களை மக்களுக்கு அளிக்கும் பணியை பத்திரிகையாளர்கள் இடைவிடாது தொடர்ந்து செய்துவந்தனர். கொரோனாவின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. கூட்டுறவு சங்கத்தில் சுமார் 5 ஆயிரம் பணியிடம் காலியாக இருக்கிறது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார். கர்நாடக பத்திரிகையாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரகுமார், துணை தலைவர் லட்சுமிநாராயண், இயக்குநர் மோகன் செயலாளர் மல்லராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>