படைகளை வாபஸ் பெற வேண்டும் சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் பேச்சு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் திசோ ஏரி பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததால், அங்கு பதற்றம் நிலவியது. இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட 9ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதன்படி, கடந்த வாரத்தில், இரு நாடுகளும் பாங்காங் ஏரி பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெற்றன. இதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் சரியான நேரத்தில் கருத்து பரிமாற்றங்கள் செய்யவும், ஆலோசனைகள் செய்யவும் ஹாட்லைன் தொடர்பை ஏற்படுத்த ஒப்புக் கொண்டன.

அதன்படி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் 75 நிமிடங்கள் தொலைபேசி மூலம் உரையாடினார். அப்போது, ‘இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால், எல்லையில் உள்ள அனைத்து பதற்றமான பகுதிகளில் இருந்தும், படைகளை திரும்ப பெற வேண்டியது அவசியமாகும்,’ என்று வாங்கிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

Related Stories:

>