சட்டப்பேரவை தேர்தல் தமாகாவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்: ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தமாகாவில் விருப்ப மனுக்கள் நேற்று முதல் முதல் வினியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் நேற்று காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று ஏராளமானோர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கினர். பொதுத்தொகுதிகளுக்கு ரூ.5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.2,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் தென்காசி தொகுதியில் போட்டியிட மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ். வால்பாறை தொகுதிக்கு கோவை தங்கம், வேளச்சேரி தொகுதிக்கு கொட்டிவாக்கம் முருகன், காங்கேயம் தொகுதிக்கு விடியல் சேகர், ஈரோடு மேற்கு தொகுதிக்கு இளைஞர் அணி தலைவர் யுவராஜ் ஆகியோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்று தமாகா அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை, தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சக்திவடிவேல், அசோகன், டி.எம்.பிரபாகரன் ஆகியோர் வாங்கினர்.

Related Stories: