மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு: வைகோ கண்டனம்

சென்னை: பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில் முஸ்லிம் வெறுப்பு ஊடுருவியுள்ளது என்று வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: முதல்கட்ட தேர்தலில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த பா.ஜ. தற்போது நடக்கும் பிரசாரத்தில் மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளது. இதன் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு அது பகிர்ந்து அளிக்கப்படும் என்று உள்ளது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா? என்று தனது இ ஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் மோடி.

மோடி, தேர்தல் பரப்புரையில் பேசிய முஸ்லிம்களுக்கு எதிரான விஷம் தோய்ந்த கருத்துக்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார்கொடுக்கப்பட்டன. ஆனால், அதை எல்லாம் அலட்சியப்படுத்திய பிரதமர் மோடி, மீண்டும் தான் பேசியது சரிதான் என்று ஆணவத்துடன் கொக்கரித்து இருக்கிறார். இது அவரது சிந்தையில் நிறைந்துள்ள ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆர்.எ ஸ்.எஸ் தொட்டிலில் வளர்ந்த மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அவரது கீழ்த்தரமான பேச்சுக்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

The post மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: