கை தட்டுங்களேன்... பட்ஜெட் உரையின்போது கை தட்ட சொன்ன ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வனத்துறை குறித்த அறிவிப்புக்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கைத்தட்டலை கேட்டு வாங்கியது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது. இந்தநிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடுகிறது.

அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 10வது முறையாகும். பட்ஜெட் உரையின் போது ஓபிஎஸ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குறித்தும் அதற்கு ஒதுக்கியுள்ள நிதி விவரங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைத்தட்டினார். மற்ற யாரும் கைத்தட்டவில்லை.

இதனால் பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்து “கைத்தட்டுங்களேன்... பாவம் அண்ணன் மட்டும் கை தட்டிக்கொண்டிருக்கிறார்” எனக்கூறி சிரித்தார். பின்னர் அனைவரும் கைத்தட்டினர். தொடர்ந்து ஓபிஎஸ் பட்ஜெட்டை வாசித்தார். பட்ஜெட் உரைக்கு இடையே துணை முதல்வரே கைதட்டுங்க அண்ணே என்று கேட்ட சம்பவம் சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

Related Stories: