நாகை நகரில் 1.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கழிவறைகள் திறப்பதில் மெத்தனம்-மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

*இது உங்க ஏரியா

நாகை : நாகை கோர்ட் வளாகத்தில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட கழிவறையை திறக்க வேண்டும் என்று நாகை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நல உரிமைச் சங்க தலைவர் பாஸ்கரன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாகை நீதிமன்ற வளாகத்தில் தாசில்தார் அலுவலகம் செல்லும் வழியில் ரூ.15 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிவறை கட்டப்பட்டது. மக்கள் வரி பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இன்று வரை பயன்பாட்டிற்கு விடாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர்.

அதேபோல் நீதிமன்றம் வளாகத்தை சுற்றி ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கழிவறைகள் திறக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டிமுடிக்கப்பட்ட வழிவறையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: