12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஹரித்துவார் கும்பமேளா ஏப்ரல் 1ம் தேதி துவக்கம்: கொரோனா சான்றிதழ் கட்டாயம்

புதுடெல்லி: உலக புகழ்பெற்ற ஹரி்த்துவார் கும்பமேளா, ஏப்ரல் 1 முதல் நடத்தப்பட உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் ஒவ்வொரும் ஆண்டும் புகழ்பெற்ற கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடைசியாக கடந்த 2010ல் இது நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள். வரும் ஏப்ரல் 1ம் தேதி கும்பமேளா தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் கொரோனா சான்றிதழ் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

இது குறித்து முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறுகையில், ``இது தொடர்பான முடிவு எடுக்கும் முன்பு, ஹரிதுவாரில் உள்ள சந்நியாசிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கும்பமேளாவின் போது மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தொற்று நடவடிக்கைகளை பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதன்படி, 72 மணி நேரத்துக்குள்ளாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கும் பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். கும்பமேளா வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கும்பமேளாவில் பங்கேற்பவர்களை கணக்கிட செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தப்பட உள்ளது,’’ என்றார்.

Related Stories: