சசிகலா ஆதரவு போஸ்டர்கள் அதிகரிப்பு: தேனி மாவட்டத்தில் உடைகிறது அதிமுக?

தேனி: தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சசிகலாவிற்கு வரவேற்பு போஸ்டர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் தேனி மாவட்ட அதிமுக உடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலாவை அதிமுகவில் 100சதவீதம் சேர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் உட்பட அதிமுக தலைவர்கள் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என கூறி வருகின்றனர்.

ஆனால், தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். நாகர்கோவில், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

இது தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர். தொடர்ந்து தேனி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் தற்போது உள்ள அதிமுக தலைமையை மீறி சசிகலாவிற்கு வரவேற்பு கொடுக்க தொடங்கி விட்டனர். இப்படியே போனால் தேனி மாவட்டத்தில் தான் அதிமுக முதலில் உடையும் என உளவுப்பிரிவு போலீசார் மேலிடத்துக்கு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: