மாங்காய் வேப்பம்பூ குழம்பு

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் புளிக்கரைசல், 1 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். சிறிது கெட்டியாக வந்ததும் மாங்காய் துண்டுகள் சேர்க்கவும். மாங்காய் பாதி வெந்ததும், ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், வேப்பம்பூ, தாளிப்பு வடவம் அனைத்தையும் தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். வெல்லம் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து மாங்காய் வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: 2 நாட்கள் வரை குழம்பு கெடாது.