கம்பு இட்லி

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

கம்பை நன்றாக கழுவி ஊறவைத்து, இட்லி மாவு அரைக்கும் போது மாவுடன் ஊறிய கம்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் இஞ்சி, பூண்டை வதக்கி எடுத்து அரைத்து கொள்ளவும். காய்ந்தமிளகாயை பொடி செய்து கொள்ளவும். மாவில் இஞ்சி பூண்டு விழுது, காய்ந்தமிளகாய் பொடி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இட்லி மாவு கலவையில் கொட்டி நன்றாக கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.