முருங்கைக்காய், தக்காளிக்காய் அவியல்

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1/4 கப்,

பச்சைமிளகாய் - 2.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேக விடவும். முருங்கைக்காய் பாதியளவு வெந்ததும், மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய தக்காளிக்காயை சேர்த்து வேகவிடவும். காய்கள் குழைய கூடாது. காய்கள் வெந்ததும் அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தயிர் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு நன்றாக கலந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும். அடை, சாம்பார், ரசம், குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.