சாதனை பெண்களுக்கு வணக்கம் செலுத்துவோம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் நாட்டின் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து இருக்கும் நமது மகள்களுக்கு வணக்கம் தெரிவிப்போம். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் கல்விக்கான அணுகல், சிறந்த சுகாதார பராமரிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காகவும், அவர்களுக்கான அதிகாரம் அளித்தலை நோக்கியும் பணியாற்றுபவர்களை ஊக்குவிப்பதற்கான சிறந்த நாளாகும்,’ என கூறியுள்ளார். 

Related Stories: