திருவனந்தபுரம் அருகே பாச போராட்டம்; தாய் இறந்தது தெரியாமல் தவித்த குட்டி யானை: வனத்துறையினர் மீட்டனர்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே அருகில் ஒரு வயது குட்டி தவித்து நிற்க தாய் யானை ஆற்றங்கரையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் அருகே விதுரா கல்லாறு அருகே தனியார் நிலத்தில் பெண் யானை ஒன்று ஆற்றங்கரையில் இறந்து கிடந்தது. அதன் உடலுக்கு அருகில் ஒரு வயதே ஆன குட்டி யானை மணிக்கணக்கில் தவித்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து குட்டி யானையை மீட்டு கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

இறந்த தாய் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காட்டில் புதைக்கப்பட்டது. நுரையீரல் தொற்று காரணமாக யானை இறந்துள்ளது. அந்த யானைக்கு 45 வயது இருக்கும் எனவும், குட்டியுடன் ஆற்றுக்கு நீர் அருந்த வந்தபோது இறந்திருக்கலாம் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>