கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து சமூக வலைதளத்தில் வெளியீடு; கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்

சிக்கமகளூரு: சினிமா பாணியில் கல்லூரியின் கழிவறை ஜன்னல் கண்ணாடியை வெறும் கைகளால் உடைத்து அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கல்லூரி மாணவனை நிர்வாகம் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தது.

மூடிகரேவில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் அக்சய். இவர் சினிமா படங்களில் செய்யும் சாகசங்களை போல் தானும் செய்ய நினைத்து கல்லூரியில் உள்ள கழிவறையின் ஜன்னல் கண்ணாடியை வெறும் கைகளால் உடைத்து அதை தன் நண்பர்களை வீடியோ எடுக்க வைத்து தன் பேஸ்புக்கில் பதிவேற்றினார். இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அந்த மாணவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவனின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி மாணவனை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மூடிகரே போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: