விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது: பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டன்: அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட அசாஞ்சை நாடு கடத்த கூடாது என்று பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் நிறுவனத்தை கடந்த 2006ல் தொடங்கினார். ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்த ராணுவ ரகசிய ஆவணங்களை கடந்த 2010ம் ஆண்டு அவர் வெளியிட்டார். இதனால், அவர் மீது உளவு பார்த்தல் உள்பட 18 வழக்குகள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 175 ஆண்டுகளை வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரை நாடு கடத்தும் சூழல் ஏற்பட்டதால் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 2012ல் தஞ்சமடைந்தார்.

ஈகுவடார் அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவர் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த கோரி தாக்கல் செய்யப்பட வழக்கில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த கூடாது என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: