பாஜக-வை விட குறைந்த வாக்குகள் பெற்றால், நாம் தமிழர் கட்சியை கலைத்துவிடுகிறேன் : ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால்

சென்னை : பாஜக-வை விட குறைந்த வாக்குகள் பெற்றால், கட்சியை கலைத்துவிடுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நாட்டில் 5 கட்ட மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில், இன்னும் 2 கட்ட தேர்தல்களே மீதம் உள்ளன. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சீமான் பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பா ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரிலுள்ள அவரது சிலைக்கு மே 24-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்தார் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட எண்ணூர் தனியார் உர ஆலையை திறக்க விட மாட்டோம்.

தமிழ்நாடு அரசு அந்த ஆலையை திறக்க உத்தரவிடக் கூடாது. தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து பேசுகிறார் மோடி. இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பே பேசியிருக்க வேண்டியதுதானே!. முல்லை பெரியாறு அணை உறுதியோடு இருப்பதாக கூறியுள்ளதால் புதிய அணை கட்டக்கூடாது. சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தனித்து பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார்.

The post பாஜக-வை விட குறைந்த வாக்குகள் பெற்றால், நாம் தமிழர் கட்சியை கலைத்துவிடுகிறேன் : ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் appeared first on Dinakaran.

Related Stories: