தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கமாகும். அந்த வகையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய பாடநூல்கள், சீருடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

The post தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: