வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை; நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் வாய்த்துள்ளார் : அமைச்சர் ரகுபதி கண்டனம்

புதுக்கோட்டை : ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றதற்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துள்ளது. முன்னதாக, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.இதையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “மீண்டும் மீண்டும் ஆளுநர் ரவி, இதே சர்ச்சையை கிளப்பினால் என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை. நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் நமக்கு வாய்த்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகிறார்கள்; ஒடிசாவில் தமிழர்களை திருடர் என்கிறார்கள். மத்தியில் இண்டியா கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும். இம்முறை இண்டியா கூட்டணி 300ல் இருந்து 370 வரையிலான இடங்களை கைப்பற்றும். முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. அணை விவகாரத்தில் தமிழக முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பது தன அரசின் லட்சியம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை; நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் வாய்த்துள்ளார் : அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: