திடீரென அதிகரிக்கும் கொரோனா பரவல்..! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு பாதிப்பு: 299 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 21 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. கடந்த 24 மணி நேர விவரம்;

* புதிதாக 21,822 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,66,674 ஆக உயர்ந்தது.

* புதிதாக 299 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,48,738 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,139 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,60,280 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,57,656 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 95.99% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.56% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,27,244 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 17,20,49,274 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories: