ஓய்வு தொழிலாளர்களுக்கு பணபலன் ரூ.972 கோடி நிதி ஒதுக்கீடு: போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவ்வாறு பணியில் உள்ளவர்கள் ஓய்வுபெறும் போது அவர்களுக்கு முறையாக பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. இதைக்கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து கடந்த வாரம் தொழிலாளர் நலத்துறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஓரிரு நாட்களில் பணப்பலன்களை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி 2019 ஏப்ரல் முதல் 2019 மே வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்குவதற்காக ரூ.445.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2019 ஜூன் முதல் 2019 டிசம்பர் வரையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்குவதற்கு ரூ.526.47 கோடி என மொத்தம் 972.43 கோடி வழங்க உத்தவிடப்பட்டுள்ளது.

Related Stories: