கம்பு சேமியா பிசிபேளாபாத்

எப்படிச் செய்வது?

வறுக்க கொடுத்த பொருட்களைச் சிவக்க வறுத்து ஆறியதும் பொடிக்கவும். கம்பு சேமியாவை கழுவி, துவரம்பருப்புடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சற்றே தளர வந்ததும் பொடித்த பொடியை தூவி கிளறி இறக்கவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பிசிபேளாபாத்தில் கொட்டி கலந்து சூடாக பரிமாறவும்.