வாழை இலை ஃபிஷ் ஃப்ரை

எப்படிச் செய்வது?

மீன் பொரிக்க கொடுத்த பொருட்களை கலந்து மீனில் பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொறித்தெடுக்கவும். மொறு மொறுவென்று பொரிக்கத் தேவையில்லை. கிரேவிக்கு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி டொமேட்டோ சாஸ், உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

வாழை இலையை தீயில் வாட்டிக் கொள்ளவும். பின் இலையின் மேல் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் கிரேவியை வைத்து அதன் மேல் மீனை வைத்து மீனின் மேல் கிரேவி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு வைத்து இலையை நன்றாக மடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வாழ இலையுடன் கூடிய மீனை வைத்து மூடி போட்டு இருபுறமும் பிரவுன் கலர் வரும் வரை மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்.