கார கொழுக்கட்டை

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு...

பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு போட்டு பிசறி வெந்நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பூரணத்திற்கு...

கடாயில் எண்ணெயை காயவைத்து கேரட், கோஸ், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மிளகுத்தூள் கலந்து இறக்கவும். அரிசி மாவிலிருந்து சிறு உண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.