பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் கலிங்கா கல்வி நிறுவனம் 16வது பட்டமளிப்பு விழா: 7,135 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

புவனேஸ்வர்: கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில், காணொலி மூலம் 7,135 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஒடிசாவில் செயல்படும் கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 16வது பட்டமளிப்பு விழா, காணொலி மூலமாக கடந்த 21ம் தேதி நடந்தது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, வங்கதேசத்தை சேர்ந்த பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வாழும் கலை மையத்தின் நிறுவனரும், ஆன்மீக தலைவருமான ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், இந்திய வானிலை மைய இயக்குனர் மிருதயுஞ்செய் மொகாபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த 16வது பட்டமளிப்பு விழாவில் 7,135 மாணவர்களுக்கு காணொலி மூலம் பட்டம் வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய 3 மாணவர்கள் கல்வி நிறுவனர்களின் பெயரில் வழங்கப்படும் தங்கம் விருது பெற்றனர். 23 மாணவர்களுக்கு வேந்தர்கள் தங்க விருதும், 28 மாணவர்களுக்கு துணை வேந்தர்கள் பெயரில் தங்கம், வெள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன. இது தவிர, 95 ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

Related Stories: