புதிய நாடாளுமன்றம் கட்ட டிச. 15 க்குள் அடிக்கல் விழா

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் அடிக்கல் நாட்ட உள்ளார். தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 15ம் தேதிக்குள்  நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலைப் பொறுத்து, டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இக்கட்டுமான பணி ,ரூ.861.90 கோடி செலவில் 21 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டும் வரை, தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளன. புதிய கட்டிடம் கட்டிய பிறகு அவை பொருத்தமான இடங்களில் மீண்டும் வைக்கப்பட உள்ளன.

Related Stories:

>