ராஜ்மா பர்கர்

எப்படிச் செய்வது?

ராஜ்மாவை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை வதக்கி, கேரட் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். பாத்திரத்தில் அரைத்த ராஜ்மா, வதக்கிய வெங்காயம், கேரட் கலவை, மசாலாத்தூள்கள், ஓட்ஸ், மைதா, பிரெட் தூள், மல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.பர்கர் பன்னில் மையோனைஸ் தடவி மேலே பேட்டி (patty) வைத்து வெங்காயம், தக்காளி சாஸ் ஊற்றி, அதன் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து மூடி டூத் பிக் செருகி பரிமாறவும். வேண்டுமானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.