கோவை குண்டுவெடிப்பு விவகாரம் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கோவையில் கடந்த 1998ம் ஆண்டு  பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், பல  அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான  வழக்கில் கைதான ஒரு சிலர் மட்டும் மேல்முறையீடு செய்து விடுதலை ஆகியுள்ளனர். இந்நிலையில், அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் உட்பட  ஐந்து பேர்தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது, நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப் மற்றும் அனிருத் போஸ் அமர்வில் நேற்று விசாரணைக்கு  வந்தது. அப்போது, மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக  அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்டி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: