சிறகடிக்க ஆசை

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

போராட்டம் நிறைந்த காஷ்மீர் மாநிலத்திலிருந்து, ஸ்ரீநகரை சேர்ந்த 30 வயதான இராம் ஹபீப், பயணிகள் விமானத்தை ஓட்டும் காஷ்மீரின் முதல்  இஸ்லாமிய பெண் விமானி ஆகியுள்ளார். தன் பணியை வெகு விரைவில் தொடங்க உள்ளார் இராம் ஹபீப். தான் கடந்து வந்த பாதை குறித்து கூறுகையில், “ 12ஆம் வகுப்பு முடித்ததுமே  பைலட் ஆகவேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அதன் பிறகு டெஹ்ராடூனில் வனவியல்  துறையில் இளநிலை பட்டம் படித்தேன். முதுநிலைப் படிப்பை ஷெரி காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில்  முடித்தேன். ஆனாலும் பைலட் ஆகவேண்டும் என்கிற கனவு மட்டும் அப்படியே என் இதயத்தில் பதிந்தே இருந்தது.

விமானம் ஓட்டுவது காஷ்மீர் போன்ற பகுதியில் வாழும் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதுதான் எனது பெற்றோரின்  கவலையாக இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெற்றோரிடம் அனுமதி பெற்று அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்தேன். கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக, தனியார் ஏர்லைன்ஸில் ஓட்டுநராகப் பணியாற்றப்போகிறேன்.  மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்தத் தருணத்தை மறக்க முடியாது. என் கனவு நனவாகிவிட்டது'' என்று நெகிழ்ச்சியுடன்  தெரிவிக்கிறார்.

-ஜெ.சதீஷ்

Related Stories: