ஜான்சி ராணி வேடம் அணிந்து பாஜ பெண்கள் வேல் யாத்திரை பேரணி

பெ.நா.பாளையம், -கோவையில் பாஜ மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக நேற்று இளைஞரணி மாநில செயலாளர் பிரீத்தி லட்சுமி தலைமையில் 60 இருசக்கர வாகனத்தில் பெண்கள் ஜான்சி ராணி வேடம் அணிந்து கணுவாயில் இருந்து மருதமலை வரை ஊர்வலமாக சென்றனர். இளைஞர் அணி மாநிலத் தலைவர் வினோஜ் செல்வம் பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக கணுவாய் பஸ் நிறுத்தத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில பொருளாளர் செல்வகுமார், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜ், இளைஞர் அணி செயலாளர் சிவசக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: