சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் பீகாரில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!!

பாட்னா:  சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் பீகாரில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான  வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில், அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வெடிகுண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டன. பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>