சோலார் ஸ்கை டைவிங்

நன்றி குங்குமம்

சுவிட்சர்லாந்தின் சாகச விளையாட்டு வீரர் ரபேல் டோம்ஜனைப் பற்றித்தான் அங்கே ஹாட் டாக். சோலார் சக்தியில் இயங்கும் விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து வைரலாகிவிட்டார் ரபேல். சோலார் விமானத்தில் ஸ்கை டைவிங் செய்வது உலகில் இதுவே முதல் முறை. ரபேலின் இந்த சாகசம் ஸ்கை டைவிங் விளையாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

பொதுவாக அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ஸ்கை டைவிங் செய்வதுதான் வழக்கம். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் சோலார் சக்தியில் இயங்கும் விமானத்தை வடிவமைத்துள்ளனர். இரண்டு இருக்கைகள் மட்டுமே உள்ள இந்த விமானத்தை புரமோட் செய்யும் விதமாக இந்த ஸ்கை டைவிங் நிகழ்வு நடந்தது. சுமார் 5000 அடி உயரத்திலிருந்து பாராசூட் மூலம்  ரபேல் ஸ்கை டைவிங் செய்யும்போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருந்தது விமானம்.

Related Stories: