ஆந்திர விவசாயிகளுக்கு தண்ணீர் கனவு திட்டத்தில் இலவச ஆழ்துளை கிணறு: ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்

திருமலை: ஆந்திராவில் தண்ணீர் கனவு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தொடங்கி வைத்தார். ஆந்திர மாநில முதல்வர் தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தண்ணீர் கனவு (ஜல கலா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், காணொலி காட்சியில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகளிடம் முதல்வர் ஜெகன்மோகன் பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘‘விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி ஒய்.எஸ்.ஆர் (ஜல கலா) தண்ணீர் கனவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2 லட்சம் ஆழ்துளை கிணறு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 144 கிராமப்புற தொகுதிகள், 19 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைப்பதோடு மோட்டார் இலவசமாக பொருத்தி தரப்படும். இதற்காக கூடுதலாக ரூ.1600 கோடி அரசு செலவு செய்ய உள்ளது’’ என்றார்.

Related Stories:

>