நிதின் கட்கரிக்கு கொரோனா

புதுடெல்லி: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் தனது டிவிட்டரில், ``நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவரிடம் சென்றேன். பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. தற்போது அனைவரின் வாழ்த்துகளுடனும் நலமுடன் இருக்கிறேன். என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்,’’ என கூறியுள்ளார்.

Related Stories: