திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது


திருமலை: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலுவில் உள்ள முன்னாள் அமைச்சர் சித்தா ராகவாராவ் வீட்டின் முன்பு நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 2 கடிதங்களை வீசி சென்றார். அந்த கடிதங்களை அங்குள்ளவர் பிரித்து படித்தபோது, ‘வீட்டில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை அகற்ற ரூ7 கோடி தர வேண்டும்’ என எழுதி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே உஷாரான முன்னாள் அமைச்சர் சித்தா ராகவாராவ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினர்.

ஆனால் அங்கு வெடிகுண்டுகள் இல்லாததால் நிம்மதி அடைந்தனர். இதுதொடர்பாக வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை சோதனை செய்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வீசிய மர்ம நபர் அடையாளம் காணப்பட்டார். உடனடியாக போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சித்தா ராகவாராவ் வீட்டில் கடந்த வாரம் திருடர்கள் இருவர் நள்ளிரவு 12.45 மணியளவில் சுவர் ஏறி குதித்து நுழைந்தனர். துப்பாக்கி ஏந்திய காவலர் வந்ததால் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

The post திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது appeared first on Dinakaran.

Related Stories: