சங்கிலியில் கட்டியதால் வனத்துறை மீட்டது குரங்குகளை பிரிந்த தனிமையில் தவித்து உயிர் விட்ட சாமியார்: திருவண்ணாமலையில் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியிருந்த சாமியார், குரங்குகளை பிரிந்த மனவேதனையில் இறந்தார்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வசித்து வந்த சாமியார் ஒருவர், தன்னுடன் எப்போதும் இரண்டு குரங்குகளை வைத்திருப்பது வழக்கம்.  வெளியூர் செல்லும் போதும் அந்த குரங்குகளை உடன் அழைத்துச் செல்வாராம். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிவலப்பாதை வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், சாமியார் ஒருவர் இரண்டு  குரங்குகளை சங்கிலியால் கட்டி வைத்திருப்பதை பார்த்தனர். வனத்துறை சட்டப்படி, குரங்குகளை வைத்திருப்பது தவறு என சாமியாரிடம் தெரிவித்த  வனத்துறையினர், சாமியாரிடம் இருந்த இரண்டு குரங்குகளையும் மீட்டு, கவுத்திமலை காப்புக்காடு பகுதியில் விட்டனர்.

இந்நிலையில், குரங்களை பிரித்து தனியாக இருந்த சாமியார், கடந்த 10 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு  இறந்துள்ளார். இதுகுறித்து, அவருடன் இருந்த சாமியார்கள் கூறுகையில், குரங்களை பிரிந்ததில் இருந்து மன வேதனையுடன் காணப்பட்ட அவர், உடல்  நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார் என்றனர். குரங்குகளை பிரிந்த ஏக்கத்தில், சாமியார் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: