உடுமலைப்பேட்டை அருகே தமிழக-கேரள எல்லையில் இளம் பெண் சுட்டு கொலை - 3 பேர் கைது

உடுமலைப்பேட்டை:  உடுமலைப்பேட்டை அருகே தமிழக-கேரள எல்லையில் வனவரை காட்டிக்கொடுக்காத காரணத்தினால் ஆத்திரத்தில் சந்தன கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன் என்பவர் இளம் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தளூர் பஞ்சாயத்திற்குட்பட்டது பாலப்பட்டி என்ற கிராமம். இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி சந்தன கட்டை கடத்தியதாக கூறி மணிகண்டன் என்ற இளைஞரை கேரள போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் மணிகண்டன் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

சந்தன கடத்தலில் ஈடுபட்டதை, அப்பகுதியில் பணிபுரியும் 2 வனவர்கள் காட்டி கொடுத்தார்கள் என கூறி அவர்கள் மீது மணிகண்டன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் மணிகண்டன், அவர்களை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளான். இதன் பின்னர் மணிகண்டனும் 2 சிறுவர்களும் இணைந்து அங்குள்ள வனப்பகுதியில் 2 வனவர்களையும் தேடி சுற்றி திரிந்துள்ளனர். தனைத்தொடர்ந்து கேப்பக்காடு என்ற வனப்பகுதிக்கு சென்று வனவரை தேடியுள்ளனர். அப்போது அங்கேயும் அவர்கள் இருவரும் கிடைக்காததால் அப்பகுதியில் விவசாய தோட்டத்திற்காக காவலாளியாக இருந்த சந்திரிகா என்ற 32 வயதுடைய இளம் பெண்ணிடம் சென்று, கழுத்தில் துப்பாக்கியை வைத்து, வனவர் இருவரும் எங்கே? என வினவியுள்ளார். அப்போது சந்திரிகா எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மணிகண்டன் சந்திரிகாவை சுட்டு கொலை செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பின்தங்கிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் விவசாய தொழில்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது தொழிலில் ஈடுபட்டிருந்த காவலாளி சந்திரிகாவை மணிகண்டன் துப்பாக்கியால் சுட்டு கொண்டுள்ளார்.  இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மறையூர் காவல் துறையினர் மணிகண்டன் மற்றும் உடனிருந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: