தண்ணீர் பேரலில் அமுக்கி 1 மாத குழந்தை கொலை

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா(25). இவருக்கும், கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோயில் வடக்கு வீதியை சேர்ந்த பாலமுருகனுக்கும் (35) கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு 38 நாட்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது தாய் வீட்டில் உள்ள சங்கீதா நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து அருகில் தூங்கினார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது தனது அருகில் படுத்திருந்த குழந்தையை காணாததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது, வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சங்கீதாவின் தந்தை வீரமுத்து, தாய் ரேவதியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post தண்ணீர் பேரலில் அமுக்கி 1 மாத குழந்தை கொலை appeared first on Dinakaran.

Related Stories: