ரூ.150 கோடி போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

நாகப்பட்டினம்: சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடமான வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் தங்கியிருந்தனர்.அவர்கள் வந்த சொகுசு காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரின் இருக்கையின் கீழ் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.150 கோடி மதிப்பிலான ஹாசீஸ் என்ற போதை பொருள் பண்டல், பண்டல்களாக அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதை பொருள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்தனர். அதில், அவர்கள் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த சுதில்கவாஷ்(39), தில்குமார்தப்பா மனோகர் (34) என்பதும், போதைப்பொருளை பதப்படுத்தி இலங்கைக்கு படகு வழியாக கடத்தி செல்வதற்காக காரில் 75 கிலோ கொண்டு வந்ததும், இவர்களுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஒருவர், செல்போன் வழியாக ரூட் மேப் போட்டு கொடுத்ததும் தெரிய வந்தது.

The post ரூ.150 கோடி போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: