அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

நியூயார்க்: அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் ஜோ பைடன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்பு, ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய பைடன், பல்வேறு தடைகளை தகர்ந்து துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்தார். கறுப்பினப் பெண்கள், தெற்காசிய அமெரிக்கர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் ஒரே குரலாக கமலா ஹாரிஸ் ஒலிப்பதாக புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், அமெரிக்காவை அனைவரும் இணைந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனது முதல் பணி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தான் என்று உறுதியளித்த பைடன், பொருளாதார பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, கொரோனா அச்சுறுத்தல் என அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் அமெரிக்கர்களை டிரம்ப் காப்பாற்ற தவறிவிட்டதாகவும் சாடினார். டிரம்பின் அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ள இருண்ட காலம் விரைவில் முடிவுக்கு வரும் என குறிப்பிட்ட பைடன், மீண்டும் அமெரிக்கா ஒளிமயமிக்க நாடாக திகழும் என்றும் சூளுரைத்தார்.

Related Stories: