பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை லலிதா ஹோமம்

பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்ச்சார்ச்சனை விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடி லட்ச்சார்ச்சனைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், கோயில் நித்தியப்படி உரிய பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று லலிதா ஹோமம் நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தில் பழங்கள், திரவிய பொருட்கள், பட்டாடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து வரும் 14ம் தேதி மதியம் மகா அபிஷேகமும், சாயரட்சையில் அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று விழா நிறைவடைகிறது. அன்றைய இரவு நடைபெறும் வெள்ளிரத புறப்பாடு இல்லையென கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14ம் தேதி நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: